600 குழந்தைகளுக்கு ஒரே தந்தை? கடுப்பில் நீதிமன்றம், அதிர்ச்சியில் பெண்கள்!
550 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையானவருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
விந்தணு தானம்
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜோனாதன் ஜேக்கப்(41). கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு உதவிடும் நோக்கத்தில் விந்தணுக்களை தானம் செய்து வருகிறார். தொடர்ந்து இதையே தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளார்.
அந்த நாட்டின் கருத்தரிப்பு சட்ட விதிமுறைகளின் படி, விந்தணு தானம் மூலம் ஒரு நபர் 12 மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பிற்கு காரணமாக இருக்கக் கூடாது. 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவர் மட்டுமே தந்தையாக இருக்க அனுமதியும் கிடையாது.
நீதிமன்றம் தடை
ஆனால், இவர் 11 சேர்க்கை கருத்தரிப்பு மையங்கள், மற்ற நாடுகளில் இரண்டு மையங்கள் என 13 மையங்களின் மூலமாக விந்தணுவை தானம் செய்துள்ளார். இதுவரை 600 குழந்தைகள் பிறப்புக்கு இவர் உதவியாக இருந்துள்ளார்.
இதனால், 2017 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஜோனாதனின் ஜேக்கப் விந்தணுக்களை தானம் செய்யக் கூடாது எனத் தடை விதித்தது. ஆனால் இவர், வெளிநாடு தம்பதிகள், உள்நாட்டில் உள்ள தம்பதிகள் என அனைவரையும் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு
தனது சேவையைத் தொடர்ந்து செய்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இசைக் கலைஞராக இருந்து வருகிறார். கென்யாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.