விஏஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சுரேஷ் நியமனம்
தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் லுார்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக டிஎஸ்பி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
VAO வெட்டிப்படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலரான லூர்து பிரான்சிஸ் கடந்த 25-ம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மணல் கடத்தல் சம்பவத்தில் லூர்து பிரான்சிஸ் போலீசில் புகார் செய்துள்ளார். அதனால் அவரை கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு, அவரது நண்பரான மாரிமுத்து ஆகிய 2 பேர் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, பாளை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் அவர்கள் இருவரையும் விசாரணைக்காக காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கை முறப்பாடு கிராமத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜமால் தலைமையில் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கர்க்-ன் உத்தரவுபடி சிறப்பு புலனாய்வு அதிகாரியாக தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி.சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.