கொடூர தாக்குதல் - எம்.எல்.ஏ மகன், மருமகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!
எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொடூர தாக்குதல்
சென்னை, திருவான்மியூரில் உள்ள சவூத் அவென்யூ பகுதியில் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா வசித்து வருகின்றனர்.
இவர்கள் 8 மாதங்களுக்கு முன் தங்களது வீட்டில் வேலை செய்வதற்காக 18 வயதுடைய ரேகா என்ற பெண்ணை சேர்த்துள்ளனர். முதலில் நன்றாக பார்த்துகொள்ளுவது போல் நடித்து விட்டு அதன்பின்னர் அவரை கொடுமையாக தாக்கியும் தகாத வார்த்தைகளிலும் பேசியுள்ளனர்.
தனிப்படைகள் அமைப்பு
இதனால் மனமுடைந்த ரேகா வீட்டிற்கு செல்வதாக கூறிய போது கொலை மிரட்டல் விடுத்தும் வீட்டில் உள்ளவர்களை தவறாகவும் மெர்லினா பேசியுள்ளார். பொங்கல் தினத்தன்று வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற ரேகா நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளின் மீது குழந்தை பாதுகாப்பு சட்டம், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற 5 சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விசாரணை செய்து வந்த நிலையில் இருவரும் தலைமறைவாகினார்கள்.
தற்போது, இவர்களை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக போலீஸார் 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், இருவரும் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், முன்னதாக அவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.