காருக்குள் வைத்து சிறுமியை கதற கதற கற்பழித்த கொடூரம் - MLA மகன் உள்பட 5 சிறுவர்கள் மீது வழக்கு பாய்ந்தது!
ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி ஒருவரை காருக்குள் வைத்து 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 5 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கான மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த மே 28-ம் தேதி 17 வயது சிறுமி ஒருவர் சக வயது சிறுவர்களுடன் கிளப் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி அந்த சிறுவர்கள் சிகப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் காரில் அவரை கடத்தியுள்ளனர்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்துச்சென்ற அந்த சிறுவர்கள் காருக்குள்ளேயே வைத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் எம்.எல்.ஏவின் மகன் என்பதும், மற்றொருவர் சிறுபான்மை கட்சி தலைவரின் மகன் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 18 வயதுடைய இளைஞரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட மற்ற 4 சிறார்களுக்கு எதிராக தங்களிடம் உரிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள போலீசார் அவர்களை 48 மணி நேரத்திற்குள் காவலில் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் கிளப்பிற்கு வெளியில் இருந்து சிறுமியை அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகளின் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.