அவசியம் தெரிஞ்சுக்கோங்க! -ஆடி கிருத்திகை முன்னிட்டு பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழி தரிசன கட்டணம் குறைப்பு
திருத்தணி முருகன் கோயில்
முருக பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் தினசரி ஏராளமான பக்தர்கள் அதாவது உள்ளூர் மட்டுமின்றி வெளியுறுகளில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
குறிப்பாக முருகன் கோயில் என்றாலே பக்தர்கள் பிரச்சனையாக கருதுவது தரிசன டிக்கெட் தான்.பொதுவாக அறுபடை வீடுகளில் முருகனை தரிசிக்க தனித்தனி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு வழி தரிசன கட்டணம்
அந்த வகையில் திருத்தணியில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழி தரிசன கட்டணம் 200 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நாளை 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.