இன்னும் பொங்கல் பரிசு டோக்கன் வாங்கல'யா...? அரசு கொடுத்த இன்ப செய்தி..? use பண்ணிக்கோங்க
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் துவங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெறுகிறது.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
ஹாப்பி நியூஸ்..
அதற்காக வழங்கப்படும் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பயனாளிகள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பரிசு தொகுப்பைப் பெறலாம்.டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படவுள்ளது.
ஆனால், தவிர்க்க முடியாத சூழலில் இந்த டோக்கனை வாங்க முடியாமல் போனவர்களுக்கு அரசு அறிவிப்பு ஒன்றை ஏற்கனவே வெளியிட்டுருந்தது. அந்த அறிவிப்பின் படி, இன்று 13 -ஆம் தேதி மற்றும் நாளை 14 -ஆம் தேதி ஆகிய தேதிகளில்,
தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.