தமிழகத்தில் தற்போது இருப்பதே போதும்..புதியது தேவையில்லை - மத்திய அரசுக்கு ஏதிராக அப்பாவு!

Tamil nadu Chennai Government Of India M. Appavu
By Swetha Aug 30, 2024 07:30 AM GMT
Report

தற்போது இருக்கின்ற கல்வி முறையே போதும். புதிய முறை தேவை இல்லை என அப்பாவு தெரிவித்தார்.

அப்பாவு 

சென்னை மயிலாப்பூரில், கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, 'சட்டசபை நாயகர் - கலைஞர்' என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழகம் கல்வியில், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் தற்போது இருப்பதே போதும்..புதியது தேவையில்லை - மத்திய அரசுக்கு ஏதிராக அப்பாவு! | Speaker Appavu Speech Against Central Govt

மத்திய அரசு, 8ம் வகுப்பு வரை, கட்டாயக் கல்வி என்கிறது. பள்ளி கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. தமிழக அரசு கல்விக்கு, அதிக நிதியை ஒதுக்குகிறது. நடப்பாண்டு பட்ஜெட்டில், 44,000 கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இது, மொத்த பட்ஜெட்டில், 8 சதவீதம். இது போக உயர் கல்வி உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டால்தான், 'சமக்ரா சிக் ஷா அபியான்' திட்டத்தில் நிதி ஒதுக்குவேன் எனக் கூறுகிறது.

இந்தியாவிலே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்!

இந்தியாவிலே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்!

தமிழகத்தில்..

இது நியாயமா. எந்த அரசு எந்த கல்விக் கொள்கையை கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பது நோக்கமல்ல. மோடி கொண்டு வந்ததால் ஏற்க மாட்டோம் என சொல்லவில்லை. ஆனால், 5ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால், உன் தந்தையார் தொழிலுக்கே செல்ல வேண்டும் என,

தமிழகத்தில் தற்போது இருப்பதே போதும்..புதியது தேவையில்லை - மத்திய அரசுக்கு ஏதிராக அப்பாவு! | Speaker Appavu Speech Against Central Govt

மறைந்த ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை, மீண்டும் கொண்டு வருவதை ஸ்டாலின் எதிர்க்கிறார். நாட்டில், 10 கோடிக்கு மேல் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். சமஸ்கிருதம் பேசுவோர், 25,000 பேர் இருப்பர்.

அந்த மொழியை கட்டாயம் படிக்க வேண்டுமென்பது நியாயமா. எனவே, முதல்வர் சமஸ்கிருதம் தேவை இல்லை என்கிறார். தமிழகத்தில் தற்போது இருக்கின்ற முறையே போதும். புதிய கல்வி முறை தேவை இல்லை. என்று தெரிவித்துள்ளார்.