தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்கிறேன் ஆனால் ஒரு கண்டிஷன் - ராகுல் காந்தி வைத்த ட்விஸ்ட்
துணை சபாநாயகர் பதவியை பாஜகவின் கூட்டணி கட்சிகள் கேட்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கூட்டணி ஆட்சி
நாட்டில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஜனதா தளம் போன்ற கட்சிகளை இணைத்து ஆட்சியையே அமைத்துள்ளது.
தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் பலத்தை நம்பியிருக்கும் பாஜகவிற்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கிய 2-வது நாளே பெரும் சவால் வந்துள்ளது. நாடாளுமன்றத்தின் கீழவைக்கான சபாநாயகர் தேர்வு சிக்கலை உண்டாக்கியுள்ளது. மீண்டும் ஓம் பிர்லாவை மீண்டும் நியமிக்க பாஜக ஆலோசனை நடத்தி வருகின்றது.
ஆனால், அதே நேரத்தில் துணை சபாநாயகர் நியமனத்தில் தான் சிக்கல் நீடிக்கிறது. கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனதா தளம் இரு கட்சிகளுமே வேண்டுமென நிபந்தனை வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ராகுல் கண்டிஷன்
இது குறித்தான ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிறுத்தும் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்திற்கும் ராகுல் காந்தி, ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றே சபாநாயகர் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், நாடாளுமன்ற சூடுபிடிக்கப்போவதில் மாற்றுக்கருத்தில்லை.