ஒருமையில் பேசுவதாக சர்ச்சை; சரியாகத்தான் பேசுவேன் - அமைச்சர் பொன்முடி பதில்
அமைச்சர் பொன்முடி ஒருமையில் பேசும் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகியது.
பொன்முடி
மரக்காணம் பகுதியில் நல்ல ஆஸ்பத்திரி இல்லை. கோரிக்கையை நிறைவேற்றி தர மாட்டேங்கிறீர்களே என அப்பகுதி இளைஞர்கள் மைச்சர்கள் பொன்முடி மற்றும் மஸ்தானிடம் கேட்டனர்.
அதற்கு பொன்முடி, 'நீ மஸ்தானுக்கு ஓட்டுபோட்டியா' என கேட்டபடி காரில் புறப்பட்டதாக ஒரு வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், சென்னையில் பொறியல் கலந்தாய்வு குறித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.
சர்ச்சைக்கு பதில்
அப்போது மரக்காணத்தில் நடந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பதிலளித்த அமைச்சர் பொன்முடி, நான் எப்போதும் எல்லோரையும் மதித்து, மரியாதையாக பேசக்கூடியவன். தவறாக எங்கேயும் பேசுவது கிடையாது. எல்லா இடத்திலேயும் சரியாகத்தான் பேசுகிறேன்.
சில குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே பேசப்படுவதுதான். நான் பேசுவதை கட் செய்து போடுகிறார்கள். முழுமையாக பேசுவதை போட்டால் அது போன்ற குற்றச்சாட்டுகள் வராது என தெரிவித்துள்ளார்.