150 டன், 22 ஆயிரம் பேர்; களைகட்டிய கொண்டாட்டம் - கவனம் பெற்ற திருவிழா!
பாரம்பரிய தக்காளி திருவிழா கவனம் பெற்றுள்ளது.
தக்காளி திருவிழா
ஸ்பெயின் நாட்டில் ஆகஸ்டு இறுதி வாரத்தில் தக்காளி திருவிழா(லா டொமேடினா) நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் வாலன்சியா நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் புனோல் நகரில் இந்த பாரம்பரிய திருவிழா நடைபெற்றது.
இதில், வெள்ளை நிற உடையில் ஆண்கள், பெண்கள் என 22 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர். 1,50,000 கிலோ (150 டன்) கணக்கிலான தக்காளிகள் 7 லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தப்பித்தவறி கூட வெறும் வயிற்றில் இந்த பொருட்களையெல்லாம் சாப்பிடாதீங்க.. பின்விளைவுகளை சந்தீப்பீங்க...
வைரல் ஃபோட்டோஸ்
இந்த திருவிழாவில் கென்யா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் வந்து பங்கேற்றுள்ளனர். உள்ளூர் மக்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை.
வெளிநாட்டில் இருந்து பங்கேற்ற நபர்களுக்கு தலா ஒருவருக்கு 16.70 டாலர்(ரூ.1,400) வசூலிக்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் தக்காளிகள் தனிப்பட்ட முறையில் இதற்காகவே விளைவிக்கப்படுகின்றன.
அதிக அமிலத்தன்மையுடன் புளிப்பு சுவை நிறைந்தவை. மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது அல்ல எனக் கூறப்படுகிறது.