25 லட்சம் மதிப்புள்ள தக்காளியுடன் கவிழ்ந்த லாரி - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

Tomato Karnataka
By Vinothini Jul 16, 2023 12:30 PM GMT
Report

தக்காளி விலை உச்சத்தில் உள்ள நிலையில் லாரியுடன் கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி விலை

நாடு முழுவதும் தக்காளியின் விளைச்சல் குறைந்ததன் காரணமாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

lorry-with-tons-of-tomato-met-with-an-accident

தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரா கர்நாடகா மற்றும் வட மாநிலங்களிலும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவில் இருந்து டில்லிக்கு சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தக்காளியுடன் சென்று கொண்டிருந்த லாரி, தெலுங்கானா மாநிலம் அதிதிலாபாத் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விழுந்தது.

விபத்து

இந்நிலையில், விபத்து ஏற்பட்டதன் காரணமாக லாரியில் இருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சரிந்தது. தக்காளி விலை தற்போது அதிகமாக இருக்கும் காரணத்தால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விபத்தில் சிக்கிய லாரியில் இருக்கும் தக்காளியை அள்ளி சென்று விடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

lorry-with-tons-of-tomato-met-with-an-accident

எனவே விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் தக்காளிக்கு துப்பாக்கிய ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்காக நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு வேறு லாரி வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த லாரியில் இருந்த தக்காளிகள், அதில் ஏற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.