விந்து கலந்து தயாரிக்கப்படும் உணவு - அறிமுகமாகும் புது டிஷ்!
மீன் விந்து கலக்கப்பட்ட உணவை தயாரிக்க உள்ளதாக உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.
மீன் விந்து
ஸ்பெயின், மாட்ரிட் நகரில் உள்ள பிரபல சமையல் கலைஞர் டேவிட் முனோஸ். DiverXO உணவகத்தின் உரிமையாளரும் இவர்தான். தற்போது தனது உணவகத்தின் மெனுவில் மீன் விந்துவால் செய்யப்பட்ட உணவுகளை சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த விந்து பஃபர் ஃபிஷ், மாங்க் ஃபிஷ் மற்றும் காட் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது. மீனிலிருந்து சிறு பைகளில் விந்து எடுக்கப்படுகிறது. வெள்ளை அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள இந்தத் திரவம் உணவில் சேர்க்கப்படுகிறது. அல்லது உணவு சமைத்த பிறகு அதில் கலக்கப்படும்.
புது டிஷ்
டேவிட் சமீபத்தில் ஜப்பான் சென்ற போது, சமையல் கலைஞரான ஹிரோசாடோவுடன் மீன் விந்தணுக்களால் செய்யப்பட்ட உணவை ருசித்து பார்த்த பிறகு இந்த யோசனை வந்துள்ளது.

அதன்பின், அதனை நகர மக்களுக்கு ஏன் தரக் கூடாது என நினைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இதனை மக்கள் விரும்பவில்லை மீன் விந்துவைக் கொண்டு உணவு சமைப்பது, அதை நினைத்தாலே குமட்டுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan