வீராங்கனை உதட்டில் முத்தம்; என் மகன் ஒழுக்கமானவன் - சங்கத் தலைவர் தாய் உண்ணாவிரதம்!
கால்பந்து அணியின் வீராங்கனைக்கு கூட்டமைப்பின் தலைவர் முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
லூயிஸ் ரூபியேல்ஸ்
ஆக.20 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஃபிஃபா மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்றது.
இதற்கான பரிசளிப்பு விழாவின்போது வீராங்கனைகளுக்கு வரிசையாக வாழ்த்து தெரிவித்த ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியால்ஸ், ஜென்னி ஹெர்மோசோ என்ற வீராங்கனையை திடீரென ஆரத்தழுவி உதட்டில் முத்தமிட்டார்.
தாய் உண்ணாவிரதம்
இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையாக வெடித்தது. வீராங்கனையின் சம்மதத்துடனே முத்தமிட்டதாக லூயிஸ் தெரிவித்தார். ஆனால் இதனை ஜென்னி மறுத்தார்.
தொடர்ந்து, 90 நாட்களுக்கு அவரை சஸ்பெண்ட் செய்தும் ஃபிஃபா உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டதால், ஸ்பெயினின் மகளிர் பயிற்சியாளர்கள் மொத்தமாக ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார் ஏஞ்சல்ஸ் பெஜார் (72) தனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர் குற்றமற்றவர் எனக் கூறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.