அழகாக இருக்கிறாய் - ஆண் விமான பணியாளருக்கு கழுத்தில் முத்தம் கொடுத்த முதியவர்!
விமான பணியாளரை முத்தமிட்டு தகராறில் ஈடுபட்ட முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆண் ஊழியர்
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து அலாஸ்காவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் டேவிட் ஆலன் பர்க் என்ற 61-வயது முதியவர் பயணம் செய்தார். விமானம் டேக் ஆப் ஆகும்போது அனைவருக்கும் மதுபானம் கொடுப்பது வழக்கம்.
அதுபோல இவருக்கும் கொடுத்தனர். பின்னர், அவர் விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது போதை தலைகேறியதால், அங்கு பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆண் விமான ஊழியரிடம் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்,
முத்தம் கொடுத்த முதியவர்
எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது என கூறியதுடன் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து கழுத்தில் முத்தம் கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை சமாதானம் செய்து 1 மணிநேரத்திற்கு பிறகு உக்காரவைத்தனர். விமானம் தரை இறங்கியதும் இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்பொழுது அவர் நான் எதுவும் செய்யவில்லை அவர்கள் கொடுத்த மதுவை தான் அருந்தினேன் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த பணியாளர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் வரும் 27 ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.