மாணவியை முத்தமிட்டு கொடூரமாக ராகிங் செய்த மாணவர்கள் - பகீர்!
மாணவியை மிரட்டி பயங்கரமாக மாணவர்கள் ராகிங் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராகிங் கொடுமை
ஒடிசா, பெர்காம்பூர் பகுதியில் பினாயக் ஆச்சார்யா எனும் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் மாணவி ஒருவரை ராகிங் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது. அதில், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ஒரு மாணவியை ராகிங் செய்கின்றனர்.
ஐ லவ் யூ என கூறி வலுக்கட்டாயமாக முத்தமிடுகின்றனர். இதில் பயந்த மாணவி ஓவ்வொரு முறையும் அந்த இடத்தை விட்டு வெளியேற முயலுகிறார். அப்போது அவரை பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பதாக மிரட்டுகின்றனர்.
வழக்குப்பதிவு
இந்த வீடியோ வெளியானதின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராகிங் செய்த மாணவனை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர், ஹர்தக்ந்தியில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த அபிஷேக் நஹக்.
இவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மற்ற மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தற்போது அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.