Ragging.. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கட்டாயம் - யுஜிசி

India
By Sumathi Sep 19, 2022 08:14 AM GMT
Report

அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ராகிங்கைத் தடுக்க கண்காணிப்பு கேமாரா கட்டாயம் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

ராக்கிங்

உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், விடுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Ragging.. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கட்டாயம் - யுஜிசி | Cctv Cameras Mandatory In All Colleges Ugc

எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிசிடிவி  கட்டாயம்

2009ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவுப்படி ராகிங் சட்டப்படி குற்றமாகும். பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956-ன் படி, உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த செயல்முறையை அனைத்து கல்வி நிறுவனங்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை மீறினால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

ராகிங்குக்கு எதிரான குழு மற்றும் ராகிங் எதிர்ப்புப் படை அமைக்கப்பட வேண்டும். ராகிங் எதிர்ப்பு செல் அமைக்கப்பட்டு முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

ராகிங்குக்கு எதிரான கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். ராகிங் தடுப்பு அலுவலர்களின் முழு விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் மாணவர்களுடன் தொடர்ந்து உரையாடி, பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்க வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களின் மின்னணு புத்தகங்கள், கையேடுகளில் ராகிங் எதிர்ப்பு எச்சரிக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ராகிங் செய்ய மாட்டேன் என்று மாணவர்களும் பெற்றோரும் https://antiragging.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.