வெறும் 11 நிமிட விண்வெளி பயணம்; முன்பதிவு செய்யலாம் - எவ்வளவு தெரியுமா?
விண்வெளிக்குச் செல்ல முன்பதிவு செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ப்ளூ ஆர்ஜின்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாசுக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நியூ செப்பர்டு என்ற விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது.
பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவை இந்த நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியது. அதன்படி, 11 நிமிடங்கள் கொண்ட விண்வெளி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மகளிர் குழு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.
விண்வெளி பயணம்
இதில் எந்தவொரு நபரும் ப்ளூ ஆரிஜின் விமானத்தில் விண்வெளிக்குச் செல்ல முன்பதிவு செய்யலாம். அந்த நிறுவனத்தின் வலைத்தளத்தில் தங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த ஆண்டு உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களைப் பட்டியலிடும் படிவத்தை பயணிகள் நிரப்ப வேண்டும்.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். பயணச் செலவு தொடர்பாக நிறுவனம் முழு தகவலை வெளியிடவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆனால் விண்வெளிக்கு பயணம் செய்ய அனைவரும் மில்லியன் கணக்கான டாலர்களை செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
