கிரகத்தில் மோதப்போகும் 'விண்வெளி உருளைக்கிழங்கு' - NASA வெளியிட்ட புகைப்படம்!
ஃபோபோஸ் துணை கிரகத்தின் புகைப்படத்தை ‘விண்வெளி உருளைக்கிழங்கு’ என்ற பெயரில் நாசா வெளியிட்டுள்ளது.
துணை கிரகம்
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) தனது சமூக வலைத்தள பக்கங்களில் விண்வெளி தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறது.
அந்தவகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள விண்வெளி உருளைக் கிழங்கின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாம் வசிக்கும் பூமிக்கு துணை கிரகமாக நிலவு உள்ளது. அதேபோல் செவ்வாய் கிரகத்துக்கும் 2 நிலவுகள் இருக்கின்றன.
ஃபோபோஸ்
அதில் பெரிய துணை கிரகமான ஃபோபோஸ், செவ்வாய் கிரகத்துடன் மோதும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு நூறு ஆண்டுக்கும் 6 அடி தூரம் என்ற வகையில் ஃபோபோஸ் அந்த கிரகத்தை நெருங்கி வருகிறது.
இது இன்னும் 50 மில்லியன் ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மோதிவிடும். அல்லது வளையமாக உடைந்துவிடும். இந்நிலையில் ஃபோபோஸ் துணை கிரகத்தின் புகைப்படத்தை ‘விண்வெளி உருளைக்கிழங்கு’ என்ற பெயரில் நாசா வெளியிட்டுள்ளது.