விண்வெளியில் 1000 நாட்கள் வசித்த நபர் - இது ஒன்று மட்டும் தான் அங்கு கடினமாம்!
விண்வெளியில் 1000 நாட்கள் தங்கி ரஷ்ய விண்வெளி வீரர் Oleg Kononenko என்பவர் சாதனை படைத்துள்ளார்.
1000 நாட்கள்
சர்வதேச விண்வெளி மையம் பூமிக்கு மேலே 400 கி.மீ உயரத்தில் அமைந்துள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு ரஷ்ய ராக்கெட் ஒன்று முதன் முதலாக விண்வெளி சென்று இதன் கட்டுமான பணியை தொடங்கியது.
பின்னர் மற்ற ராக்கெட்டுகள் வழியாக பல பாகங்கள் கொண்டு செல்லப்பட்டு இணைக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த 2000-ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது விண்வெளியில் 1000 நாட்கள் தங்கி ரஷ்ய விண்வெளி வீரர் Oleg Kononenko என்பவர் சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் விண்வெளி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
புதிய சாதனை
இதுவரை 5 முறை விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ள இவர், மொத்தம் 1000 நாட்களை கடந்து விண்வெளியில் வசித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சாதனையை கடந்த ஜூன் 4-ம் தேதி அவர் படைத்துள்ளார்.
வரும் செப்டெம்பர் மாதம் 23-ம் அவர் பூமிக்கு திரும்பும்போது 1110 நாட்களை விண்வெளியில் கழித்திருப்பார். இதுகுறித்து Oleg Kononenko கூறுகையில் தனது உறவினர்களுடன் வீடியோ காலில் பேசுவது மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வதால், தான் தனிமைப் படுத்தப்பட்டதாக உணரவில்லை.
ஆனாலும், குழந்தைகளை பார்க்காமல் இருப்பது கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக மற்றோரு ரஷ்ய விண்வெளி வீரரான Gennady Padalka என்பவர் 878 நாட்கள் 11 மணி நேரம் 29 நிமிடங்கள் 48 வினாடிகள் விண்வெளியில் இருந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.