இதை செய்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.
எஸ்.பி.வேலுமணி
சென்னை செம்மஞ்சேரியில் அதிமுக கட்சியின் 54 ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், "புரட்சி தலைவி அம்மா அவர்கள் அப்போது எங்களை எல்லாம் எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால் அப்போ மட்டும் அம்மா அமெரிக்கா சென்று டிரீட்மென்ட் எடுத்திருந்தால் இன்னும் உயிரோடு இருந்திருப்பார்கள். ஆனால் அம்மா அதை கேட்கவில்லை.
அதிமுக
இந்த கட்சி நல்லாருக்கனும், ஆட்சி நல்லாருக்கனும். இந்த கட்சியும் ஆட்சியையும் இன்னும் 100 வருசத்துக்கு இருக்கணும்னு சட்டமன்றத்தில பேசுனாங்க. திமுகவிற்கு யாரும் விரும்பி வாக்களிக்கவில்லை. 2021 ல் கோயம்புத்தூரில் அதிமுக 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. திமுகவால் கோயம்புத்தூரில் ஒரு அமைச்சரை கூட நியமிக்க முடியவில்லை.
இன்று அதிமுகவிற்கு 75 எம்.எல்.ஏ க்கள் உள்ளனர். எனவே அதிமுகவை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இன்று எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கப்படுகிறது. பள்ளிக்கூடம் வரைக்கும் வந்து விட்டார்கள். எதிர்காலம் கேள்வி குறியாகி விடும். தயவு செய்து தடுத்து நிறுத்துங்கள்" என பேசினார்.