எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு - பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்கள்!
எஸ்.பி வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.32.98 லட்சம், 1,228 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்இடி விளக்கு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார். சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 8 மணி நேரமாக இந்த சோதனை மூன்றாவது முறையாக நடத்தப்படுகின்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அவரது ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டனர்.
ஆவணங்கள் பறிமுதல்
அதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் கூடியதாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கமும், 1228 கிராம் தங்க நகைகளும், 948 கிராம் வெள்ளிப் பொருட்களும் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.