குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்ட ஆதரவாளர்கள் - கைதாகிறாரா எஸ்.பி.வேலுமணி?
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்.பி. வேலுமணி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்இடி விளக்கு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்த்தாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
இதனால் கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு தொண்டர்கள் திரண்டனர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர் .இதனை தொடர்ந்து ஆதரவாளர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.
ரெய்டு
இந்நிலையில் இன்று காலை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்த முதல் தகவல் அறிக்கையில், அவரது மனைவி ரம்யாவும் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் மதிப்பிலான சொத்துகளை குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் தொடர்புடைய 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று சோதனைக்கு பிறகு எஸ்.பி. வேலுமணியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டே சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அந்த தெரு முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.