ரயில் டிக்கெட் ரிசர்வேஷ்ன் செய்பவர்கள் நோட் பண்ணுங்க - இனி மாறும் விதிமுறை!
ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான புதிய விதிகள் அறிமுகமாகவுள்ளது.
ரயில்வே
ஜனவரி 1, 2025 முதல், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான புதிய விதிகளை ரயில்வே துறை அறிமுகப்படுத்தவுள்ளது. புதிய ரயில் அட்டவணையில் ரயில் வழித்தட வரைபடம்,
ரயில் நிலையம் மற்றும் ரயில்களின் எண்கள், ரயில்களின் பெயர், பயண நேரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக விவரங்கள், தட்கல், டிக்கெட் கட்டணம் திரும்ப பெறும் முறைகள், ரயில் பயண சலுகைகள், சிறப்பு பயண திட்டங்களும் இடம்பெற்றுள்ளது.
புதிதாக 10 ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள 19 ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. 45 எக்ஸ்பிரஸ் ரயில்களை பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்
44 எக்ஸ்பிரஸ் ரயில்களில் நிரந்தரமாக 58 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 16 ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ரயிலுக்கு மட்டும் வார பயண நாட்களின் எண்ணிகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20627-20628), மார்ச்.12-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட மைசூர் - சென்னை சென்ட்ரல் - மைசூர் வந்தே பாரத் ரயில் (20663-20664) உள்பட 8 புதிய ரயில்கள் அறிமுகம் இடம்பெற்றுள்ளன.
சென்னை சென்ட்ரல் - மைசூர் விரைவு ரயிலின் எண் (12609) மாற்றப்பட்டு புதிய எண் (16551) வழங்கப்பட்டுள்ளது. மைசூர் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலின் எண் (12610) மாற்றப்பட்டு, புதிய எண் (16552) வழங்கப்பட்டுள்ளது.