ரயில் சக்கரங்களுக்கு நடுவே இளைஞர் 250கிமீ பயணம் செய்தாரா? ரயில்வே நிர்வாகம் விளக்கம்
ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து இளைஞர் 250கிமீ பயணம் செய்ததாக கூறப்படும் நிலையில் ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
டிக்கெட் பரிசோதகர்
பொதுவாக ரயிலில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் எடுக்காமல் இருந்தால், டிக்கெட் பரிசோதகரிடம் இருந்து தப்பிக்க ரயிலில் உள்ள கழிவறையில் மறைந்து பயணிப்பார்கள்.
ஆனால் டிக்கெட் எடுக்க பணமில்லாமல் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பயணி ஒருவர் ரயிலுக்கு அடியில் உள்ள சக்கரங்களுக்கு இடையே 250 கிமீ பயணம் செய்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ரயில்வே மறுப்பு
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து பீகார் மாநிலம் டானாபூர் வரை செல்லும் டானாபூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு நபர் ரயிலுக்கு அடியில் சக்கரங்களுக்கு இடையே 250 கிமீ பயணம் செய்ததாகவும், மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ரயிலை நிறுத்தி அவரை பிடித்து விசாரித்த போது டிக்கெட் வாங்க பணமில்லமல் இவ்வாறு பயணம் செய்ததாக கூறியதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே வாரிய தகவல் மற்றும் விளம்பரத்தின் செயல் இயக்குநர் திலீப் குமார், "அந்த நபர் நின்று கொண்டிருக்கும் போதுதான் ரயிலுக்கு அடியில் மறைந்திருந்துள்ளார்.
ரயிலின் சக்கரங்கள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கின்றன, மேலும் உட்கார்ந்து பயணிக்க இயலாது. இது அடிப்படையில் சாத்தியமற்றது" என மறுத்துள்ளார்.