நிர்வாணமாக லேடீஸ் கம்பார்ட்மெண்டில் நுழைந்த இளைஞர் - அலறிய பெண்கள்
ஆடை இல்லாமல் இளைஞர் ஒருவர் ரயிலில் பெண்கள் பயணிக்கும் பெட்டியில் ஏறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார ரயில்
இந்தியாவின் பொதுப்போக்குவரத்தில் ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணித்து வருகின்றனர்.
நீண்ட தூர பயணங்களுக்கு மட்டுமில்லாமல், சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் நகரத்திற்குள்ளேயே பயணிக்க மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்றவை இன்றியமையாதது.
நிர்வாண இளைஞர்
இந்த வகையான ரயில்களில் பெண்கள் மட்டும் பயணிக்கும் தனி பெட்டிகள் இருக்கும். இந்த பெட்டிகளில் ஆண்கள் ஏற அனுமதியில்லை.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிஎஸ்எம்டி - கல்யாண் ஏசி விரைவு ரயில் மாலை 4.11 மணியளவில் காட்கோபர் ஸ்டேஷனில் நின்றது. அப்போது எதிர்பாரத விதமாக ஆடைகள் இல்லாமல் நிர்வாண ஆ ண் ஒருவர், பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டியில் எறியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். பெணகளின் அலறல் சத்தத்தை கேட்டு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. பக்கத்து பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் உடனடியாக வந்து அந்த நபரை வெளியேற்றினார்.
மனநலம் சரியில்லாதவர்
ரயில்வே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் மனநலம் சரியில்லாதவர் என தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் அவருக்கு ஆடை அணிவிக்கப்பட்டு ரயில் நிலையத்திற்கு வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.
இதை அந்த பெட்டியில் இருந்த பெண் பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். சமூகவலைத்தளத்தில் அந்த வீடியோ பரவி வரும் நிலையில், சிஎஸ்எம்டி போன்ற மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்களில் ஏன் கூடுதல் பாதுகாவலர்கள் இல்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.