அடுத்த 6 நாட்களுக்கு வெளுக்கப் போகுது மழை - வானிலை மையம் முக்கிய அப்டேட்!
அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாட்களுக்கு மழை
தமிழ்நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்டி வருகிறது. தொடர்ந்து வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது.
வெப்பநிலை?
மேலும், அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 23° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39-41° செல்சியஸ்,
இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.