தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

By Irumporai Feb 04, 2023 02:47 AM GMT
Report

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தமிழகத்தில் மழை 

காற்றழுத்த தாழ்வு நிலைக் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் | Rain Likely In 15 Districtstamil Nadu

15 மாவட்டங்களில் மழை  

அதன்படி , நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது