அரசு நிகழ்ச்சியில் கால்சட்டையில் சிறுநீர் கழித்த அதிபர் - வெளியான வீடியோ!
பொதுநிகழ்வில் அதிபர் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சல்வா கீர்
ஆப்பிரிக்கா, தெற்கு சூடான் நாட்டின் அதிபராக இருப்பவர் சல்வா கீர். கடந்த டிசம்பர் மாதம் அங்கு நடைபெற்ற அரசு விழாவில் அதிபர் சல்வா கீர் பங்கேற்றார். விழாவில் அந்நாட்டில் தேசிய கீதம் பாடிய போது அதிபர் நின்று கொண்டு அதற்கு மரியாதை செலுத்தினார்.

அப்போது தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இது அங்கிருந்த டிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதை அந்நாட்டு ஊடகங்களில் ஒளிபரப்பவில்லை. ஆனால், இந்த வீடியோ பதிவு எப்படியோ வெளியே லீக் ஆனது.
பத்திரிக்கையாளர்கள் கைது
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிபருக்கு உடல் நிலை குறித்து விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
வீடியோவை பரப்பியதாக சந்தேகப்பட்டு 7 ஊடகவியலாளர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை கவலை அளிப்பதாக தெற்கு சூடான் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பாட்ரிக் ஓயட் கூறியுள்ளார்.