20 ரூபாய்க்கு ருசியான உணவு - பயணிகளுக்காக ரயில்வே அறிவிப்பு!
பயணிகளின் வசதிக்காக ரூ.20க்கு உணவு வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரூ.20க்கு உணவு
தெற்கு ரெயில்வே, IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) உடன் இணைந்து கடந்த 2023-ஆம் ஆண்டு ‘சிக்கன உணவு திட்டம்’ என ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் படி, ஒரு உணவு தட்டு வெறும் ரூ.20க்கு கிடைக்கிறது. 200 கிராம் எடையுள்ள எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பருப்பு கிச்சடி, பூரி-கிழங்கு போன்ற சத்தான மற்றும் எளிதில் சாப்பிடக்கூடிய உணவுகள் இதில் வழங்கப்படுகின்றன.
தற்போது, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் 27 ரெயில் நிலையங்களில் 64 சிக்கன உணவு விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ரயில்வே அறிவிப்பு
சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி போன்ற முக்கிய நிலையங்களில் இம்மையங்கள் கட்டாயம் இயங்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த மையங்கள், குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் நிற்கும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் ரயில் ஏறும்போது அல்லது இறங்கும் நேரத்தில் நேரடியாக உணவுகளை வாங்கி செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலை, பகல், இரவு என தினமும் மூன்று வேளைகளிலும் உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி போன்ற முக்கிய நிலையங்களில் இம்மையங்கள் கட்டாயம் இயங்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.