இனி தனியாக காரில் போனால் வரி; ஸ்கெட்ச் போட்ட அரசு - அதிர்ந்த மக்கள்!
தனியாக காரில் பயணிப்பவர்களுக்கு வரி விதிக்க அரசு பரிசீலித்து வருகிறது.
கார் வரி
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த கர்நாடக அரசு புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநில தலைமைச் செயலாளர், ஐடி நிறுவன தலைவர்கள் மற்றும் நகர வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அரசு பரிசீலனை
அப்போது ORR (Outer Ring Road) மற்றும் பிற முக்கிய நெரிசல் சாலைகளில் தனியாக காரில் பயணிப்பவர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கினால் மட்டுமே நெரிசல் குறையும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வரி மூலம் கார்களின் எண்ணிக்கை குறைந்து, பொதுப் போக்குவரத்தை மக்கள் நாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.