இந்திய காதலனுக்காக எல்லைக் கடந்து வந்த தென்கொரிய காதலி - காஃபி ஷாப் காதலாம்!
இந்திய காதலனுக்காக தென்கொரிய காதலி எல்லைக் கடந்து வந்துள்ளார்.
காதல் அதானே எல்லாம்..
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுக்ஜித் சிங் என்பவர் 4 வருடங்களுக்கு முன்னர் தென்கொரியா சென்றுள்ளார். அங்கு பூஷன் நகர் காபி ஷாப் ஒன்றில் பணியாற்றிக் கொண்டே மேற்படிப்பை தொடர்ந்து வந்துள்ளார்.
அப்போது, காபி ஷாப்பின் காசாளராக பணியாற்றிய கிம் போ-நீ என்ற தென்கொரிய பெண்ணை கண்டு காதலில் விழுந்துள்ளார். அவருக்காக தென்கொரிய மொழியை கற்றுக் கொண்டார் சுக்ஜித்.
பறந்து வந்த காதலி
அதன் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் அது காதலாக மலர்ந்துள்ளது. தொடர்ந்து 4 ஆண்டுகள் காதலித்துள்ளனர். அண்மையில் சுக்ஜித் சிங் 6 மாத விடுப்பில் இந்தியா திரும்பினார்.
அப்போது, 3 மாத சுற்றுலா விசாவில் காதலி வந்து இறங்கியுள்ளார். மேலும் வீட்டாரிடம் காதல் குறித்து பேசியுள்ளனர். சம்மதம் தெரிவித்த அவர்கள், குருத்வாராவில் இருவருக்கும் மணமுடித்தனர்.
மேலும், பொருளாதார அளவில் அங்கே இருவரும் தங்கள் இலக்கை அடைந்ததும், தங்களது மிச்ச மணவாழ்க்கையை பஞ்சாப்பில் கழிக்க முடிவு செய்துள்ளனர்.