இது சரிப்பட்டு வராது; பொருத்தமான ஜோடிகளை இணைக்கும் முயற்சி - களத்தில் இறங்கிய நாடு!
பொருத்தமான ஜோடிகளை இணைக்கும் முயற்சியில் நாடே இறங்கியுள்ளது.
திருமணங்கள்
தென்கொரியாவில், குழந்தை பிறப்பு விகிதமும் திருமணங்கள் எண்ணிக்கையும்குறைந்துள்ளதாக அறிக்கைகள் வெளியானது. இதை தடுக்க அந்த நாட்டின் அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.
அதன்படி குழந்தை பராமரிப்பு செலவை அரசே ஏற்றது. இருப்பினும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், பொறுத்திருந்த அரசு பொருத்தமான ஜோடிகளை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
Blind Dating
அந்த வகையில், தலைநகர் சோலுக்கு அருகில் ஒரு ஹோட்டலில் சியோங்னம் மாநகராட்சி சார்பில், பிளைண்டு டேட்டிங் (Blind Dating) என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், 100க்கும் மேற்பட்ட தென்கொரிய ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.
தங்களுக்கு ஏற்ற கணவர் அல்லது மனைவியைத் தேர்ந்தெடுக்க பங்கேற்றனர். இதன்மூலம் ஒருவருக்கொருவர் பழகி, அன்பைப் பரிமாறிக்கொள்வார்கள் என கருதப்படுகிறது.
மேலும், பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.