இந்தியாவில் முஸ்லீம்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது : அமெரிக்க ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உள்ள முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த மக்கள், கடந்த காலங்களை விட கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக அமெரிக்க ஆய்வு அறிக்கை அதிர்ச்சி தகவலை வெலியிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த Pew Research Center என்ற ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி: இந்தியாவில் முஸ்லிம் மக்களிடையே, பிற மதத்தினரைவிட, பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தபோதிலும் கூட, கடந்த காலங்களை விட தற்போது அது குறைந்து கொண்டு வருவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்திய முஸ்லீம்களில், மொத்த கருவுறுதல் விகிதம் கடந்த காலங்களை விட குறைந்துள்ளதாக கூறப்படுகிறது ஆம்.. 1992 ல் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 4.4 குழந்தைகள் பிறப்பு என்று இருந்த நிலைமை 2015ல் 2.6 குழந்தைகளாக குறைந்துள்ளது.
பெரும்பான்மை இந்து மக்கள் மற்றும் முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய, புத்த மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட நாட்டின் ஒவ்வொரு மதக் குழுவைச் சேர்ந்த பெண்களும் கருவுறுதல் வீழ்ச்சியைக் கண்டு வருகிறார்கள்" என்று அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவின் முக்கிய மதக் குழுக்களில் முஸ்லிம்கள் இன்னும் அதிக கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளனர், அதைத் தொடர்ந்து இந்துக்கள் 2.1 என்ற அளவில் உள்ளனர். சமணர்கள் மிகக் குறைந்த கருவுறுதல் வீதத்தைக் கொண்டுள்ளனர்.
அதாவது ஒரு பெண் 1.2 என்ற விகிதத்தில்தான் கருவுருகிறார். 1992ல் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் சராசரியாக 4 குழந்தைகளை கருவுற்றார். இந்து மதத்தைச் சேர்ந்த பெண் 3.3 என்ற அளவில் கருவுற்றார். இப்போது அது குறைந்துல்ளது." என்று அந்த அறிக்கை கூறுகிறது.
"மக்கள்தொகை வளர்ச்சியானது பெண்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என்பது மட்டுமல்லாமல், குழந்தை பிறப்புக்கு காரணமாக உள்ள பெண்களின் சமூக நிலைமையை வைத்தும் நடக்கிறது. இந்தியாவிற்குள் மக்கள் வாழும் இடமும், அவர்களின் வரலாறு மற்றும் கலாச்சார விதிமுறைகளும் குழந்தை பிறப்பில் பங்கு வகிக்கின்றன.
சுருக்கமாக, சொன்னால் மக்களின் மதம் மட்டுமே அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கும் என்பதை தீர்மானிப்பதில்லை. மதம் இதில் ஒரு பங்கு மட்டுமே, " என்று அறுதியிட்டு கூறுகிறது, அந்த ஆய்வு முடிவுகள்.
இந்துக்கள், இந்தியாவின் 120 கோடி மொத்த மக்கள்தொகையில் 79.8 சதவிகிதமாக உள்ளனர். 2011ல் நடத்தப்பட்ட சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த தகவல் இதுவாகும். 2001ல் முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இருந்த இந்துக்கள் எண்ணிக்கையைவிட இது, 0.7 சதவிகிதம் குறைவாகும்.
1951 ல் இந்துக்கள் மக்கள் தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 84.1% ஆக இருந்தது. அதை ஒப்பிட்டால் இப்போது இந்துக்கள் மக்கள் தொகை விகிதம் 4.3 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கிடையில், முஸ்லீம்களின் எண்ணிக்கை, 2001ல் மொத்த மக்கள் தொகையில், 13.4 சதவிகிதமாக இருந்த நிலையில், 2011ல் 14.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 1951 முதல் ஒப்பிட்டால், முஸ்லீம்களின் மக்கள் தொகை இந்தியாவில், 4.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது