டேட்டிங் செய்ய காதலர்களுக்கு தனி ரூம்; குழந்தை பெற்றுகொள்ள.. அரசின் மாஸ் அறிவிப்பு!
தென் கொரியா இளைஞர்கள் டேட்டிங் மற்றும் திருமணத்தில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
டேட்டிங்
இந்தியா, சீனா, அமெரிக்கா, இந்தோனேஷியா மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் மத்தியில், தென் கொரியாவில் மொத்த மக்கள்தொகை மிகவும் குறைவாக உள்ளது.இதனால் அங்கு குறைவான மக்கள்தொகை ஒரு தேசியப் பிரச்சனையாகப் பார்க்கின்றன.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது , வெளிநாட்டினரைத் தவிர கொரியாவின் மொத்த மக்கள்தொகை 49.84 பத்து லட்சமாக இருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.2% குறைவாகும். மேலும் தென்கொரியாவில் 2021 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இது குறித்து அந்நாட்டு அரசு ஆய்வு நடத்தியதில் இளைஞர்கள் டேட்டிங் , திருமணத்தில் ஆர்வம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதில் பலரும் நாட்டம் காட்டுவதில்லை எனத் தெரியவந்திருக்கிறது. கடந்த ஆண்டு 194,000 திருமணங்கள் மட்டுமே நடந்தன .இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இது 40% சரிவு ஆகும்.
காதலர்களுக்கு தனி ரூம்
இந்தச் சூழலில் தென்கொரியா அரசு பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஆண்களையும் பெண்களையும் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் வினோத அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாத ஆண்களும் பெண்களும் சந்தித்துப் பேசும் வகையில் வாடகையுடன் கூடிய வீடு கொடுக்கப்படுகின்றன.இது தவிர அவர்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டால் அதற்கு ஒரு தொகையும், குழந்தை பெற்றுக் கொண்டால் $64,000 தொகையும் அந்நாட்டு அரசு வழங்கப்பட உள்ளது.
இதுதவிர டேட்டிங் உள்ளிட்டவைகளுக்கும் ஒரு தொகை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.