U19 World Cup: இந்தியாவை கலாய்த்த பாக். ரசிகர்கள் - தரமான பதிலடி கொடுத்த இர்பான் பதான்!
இந்திய கிரிக்கெட் அணியை கலாய்த்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.
உலகக்கோப்பை தோல்வி
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி ஜுனியர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 254 ரன்களை குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 174 ரங்களில் ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஐசிசி ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் வழக்கம்போல பாகிஸ்தான் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இந்தியாவை கிண்டலடித்து வருகின்றனர்.
குறிப்பாக சீனியர் கிரிக்கெட்டில்தான் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஐ.சி.சி. நாக் அவுட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறீர்கள் என்று பார்த்தால், ஜூனியர் கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியவில்லையா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.
இர்பான் பதான் பதிலடி
இதனால் கோபமடைந்த முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான், "இதே தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத நீங்கள் இந்தியாவைப் பற்றிப் பேச தகுதியற்றவர்கள் என்ற வகையில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "அவர்களின் அண்டர்-19 அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத சூழ்நிலையில் எல்லைக்கு அப்பால் உள்ள விசைப்பலகை (கீபோர்டு) வீரர்கள் நமது இளம் வீரர்களின் தோல்வியால் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த எதிர்மறையான அணுகுமுறை அவர்கள் தேசத்தின் மனநிலை மோசமாக இருப்பதை பிரதிபலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.