திட்டமிட்டு உடல் எடை அதிகரித்த இளைஞருக்கு சிறை - உதவிய நண்பருக்கும் தண்டனை
ராணுவ சேவையில் இருந்து தப்பிக்க திட்டமிட்டு எடை அதிகரித்த இளைஞருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கட்டாய ராணுவ சேவை
தென்கொரியாவில் 18 வயது முதல் 35 வரை உடல் திறன் கொண்ட அனைத்து ஆண்களும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இந்த கட்டாய ராணுவ சேவைக்கு சில விதிவிலக்குகள் உண்டு.
உடல்நல குறைபாடுகள் உடையவர்கள் இதில் விலக்கு அளிக்கப்படுவார்கள். மேலும் உலகளவில் பிரபலமான கே பாப் வீரர்கள் 30 வயது வரை இந்த சேவையை ஒத்திவைக்கலாம்.
சிறை தண்டனை
இந்நிலையில் 26 வயதான இளைஞர் ஒருவர் கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பிக்க திட்டமிட்டே அதிமாக உணவு உட்கொண்டு உடல் எடையை அதிகரித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு உடல் தகுதி பரிசோதனையின் போது, கிரேடு 2 மதிப்பீட்டைப் பெற்றார். இது இரண்டாவது மிக உயர்ந்த தரமாகும், மேலும் அவர் போரில் பணியாற்றத் தகுதி பெற்றிருப்பார். ஆனால் அவர் அடுத்த தேர்வில் 110 கிலோ எடை அதிகரித்து கிரேடு 4 மதிப்பீட்டைப் பெற்றார்.
இதற்காக அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது. மேலும் அவருக்கு எடை அதிகரிப்பிற்கான ஆலோசனை வழங்கி உதவிய அவரது நண்பருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.