பூமியிலிருந்து விரைவில் காணாமல் போகும் தென் கொரியா? பகீர் காரணம்!
பூமியில் இருந்து தென் கொரியா காணாமல் போகும் என்ற தகவல் பரவி வருகிறது.
மக்கள் நெருக்கடி
தென் கொரியா, தற்போது கடுமையான மக்கள் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. தற்போது இங்கு மக்கள் தொகை 52 மில்லியனாக உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் தொகை 17 மில்லியனாக அல்லது 14 மில்லியனாக சுருங்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 2024ன் கணக்கெடுப்பில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை.
தென்கொரியா நிலை
93% பேர் வீட்டு வேலை மற்றும் குழந்தை பராமரிப்பு சுமைகளை காரணமாக கூறியுள்ளது தெரியவந்துள்ளது. பல தென் கொரிய ஆண்கள் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். எனவே அரசு பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
வரிச் சலுகைகள், மானியத்துடன் கூடிய குழந்தைப் பராமரிப்பு மற்றும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்களுக்கான ராணுவ சேவை விலக்குகள் போன்றவை நடைமுறையில் உள்ளது. இருப்பினும் இதனால் பெரிதாக மாற்றம் நிகழவில்லை.
இந்த நிலையால் நூற்றாண்டின் இறுதியில் அதன் மக்கள் தொகை மூன்றில் இரண்டு பங்காக சுருங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.