ஸ்டெம்ப்புகளை காலால் உதைத்த கிரிக்கெட் வீரர்.. அதிர்ச்சியடைந்த ICC - அடுத்து நடந்த தரமான சம்பவம்!
ஸ்டெம்ப்புகளை காலால் உதைத்த தென்னாப்பிரிக்க வீரருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி, முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது போட்டி ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.5ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து 330 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி முனைப்புடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது.
கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு? இந்தியாவை விட்டு வெளியேறும் விராட் கோலி - அதிர்ச்சி தகவல்!
ஐசிசி அபராதம்
அப்போது பேட்ஸ்மேன் ஹெய்ன்ரிச் கிளாசன் 74 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற அதிரடியாக ஆடினார். ஆனால் 3 ரன்களில் சதத்தைத் தவறவிட்டு ஆட்டம் இழந்தார். மேலும் தென் ஆப்பிரிக்க அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே தோல்வி அடைந்தது.
அப்போது ஏற்பட்ட விரக்தியில் ஹென்ரிச் கிளாசென் ஸ்டெம்பை காலால் உதைத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு ஹென்ரிச் கிளாசென் மீது ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்து அவருக்குப் போட்டிக்கான கட்டணத்திலிருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.