மலையில் விபத்தில் சிக்கிய பேருந்து - 42 பேர் பலியான துயரம்!
பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
தென்ஆப்பிரிக்கா, ஈஸ்டர்ன் கேப் பகுதியில் இருந்து 400 கி.மீட்டர் தொலைவில் உஙளள லூயிஸ் டிரைகார்ட் நகரின் அருகே என்1 நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் உருண்டது.
42 பேர் பலி
தொடர்ந்து மலையடிவார பகுதியில் விழுந்தது. இச்சம்பவத்தில், சிக்கி பயணிகள் உள்ளிட்ட 42 பேர் உயிரிழந்தனர். அவசரகால குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்தவர்களில் பலர் ஜிம்பாப்வே மற்றும் மாளவி நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
