இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமையை அள்ளி கொடுக்கும் நாடு - அமெரிக்காவை விடுங்க..
ஐரோப்பிய நாடு மிகக் குறைந்த நிபந்தனைகளுடன் நிரந்தரக் குடியுரிமையைக் கொடுத்து வருகிறது.
நிரந்தரக் குடியுரிமை
ஐரோப்பிய நாடுகளில் வசிப்போர் மட்டுமின்றி, இந்தியா உட்பட எந்தவொரு நாட்டை சேர்ந்தவர்களும் எளிதாக ருமேனியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற முடியும்.
எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் வாழவும், பணியாற்றவும், படிக்கவும் முடியும். நிரந்தரக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் முன்பு, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ருமேனியாவிலேயே வசித்தும், பணியாற்றியும் இருக்க வேண்டும்.
குடியுரிமை
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியைச் சேராதவராக இருக்க வேண்டும். ருமேனியாவில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். உரிய விசாவுடன் சட்டத்திற்கு உட்பட்டு வசித்திருந்தால், இந்தக் குடியுரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மாதம் குறைந்தபட்சம் 750 யூரோக்கள் (சுமார் ₹77,834) நிலையான மற்றும் சட்டப்பூர்வமான வருமானம் இருக்க வேண்டும். உரிய மருத்துவக் காப்பீடு, ருமேனியாவில் தங்க ஒரு வசிப்பிடம் இருக்க வேண்டும். ருமேனிய மொழி ஓரளவுக்குத் தெரிந்திருக்க வண்டும். விண்ணப்பத்திற்கான நிர்வாகக் கட்டணமாக 14 யூரோக்கள் (சுமார் ₹1,447) செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், 5 முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியுரிமை அட்டை வழங்கப்படும்.