சைவ உணவு கேட்ட பயணிக்கு அசைவம் வழங்கிய விமான நிறுவனம் - மருத்துவர் பலி?

United States of America Qatar Flight Death
By Sumathi Oct 09, 2025 11:55 AM GMT
Report

சைவ உணவு கோரிய போதிலும் அவருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது.

கத்தார் ஏர்வேஸ்

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி கத்தார் ஏர்வேஸ் விமானம் சென்றது. இதில், தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான டாக்டர் அசோக ஜெயவீரா சென்றுள்ளார்.

சைவ உணவு கேட்ட பயணிக்கு அசைவம் வழங்கிய விமான நிறுவனம் - மருத்துவர் பலி? | Man Dies Qatar Airways Flight After Served Non Veg

இந்த பயணத்தில் அவர் தனக்கு சைவ உணவு தான் வேண்டும் என சொல்லி புக் செய்துள்ளார். இருப்பினும், விமானப் பணிப்பெண் ஒருவர் சைவ உணவு இல்லை என்று கூறி, அசைவ உணவை வழங்கி இறைச்சியை தவிர்த்துவிட்டு மற்றவற்றை மட்டும் சாப்பிடுமாறு கூறியுள்ளார்.

திருவிழா கூட்டத்தில் கொடூரத் தாக்குதல் - குழந்தைகள் உட்பட 40 பேர் பலி!

திருவிழா கூட்டத்தில் கொடூரத் தாக்குதல் - குழந்தைகள் உட்பட 40 பேர் பலி!

மருத்துவர் பலி

அதன்படி, இறைச்சியை தவிர்த்துவிட்டு சாப்பிட முயன்றுள்ளார். அப்போது ஜெயவீராவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதையடுத்து, விமானம் ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் தரையிறங்கியது. ஜெயவீரா உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சைவ உணவு கேட்ட பயணிக்கு அசைவம் வழங்கிய விமான நிறுவனம் - மருத்துவர் பலி? | Man Dies Qatar Airways Flight After Served Non Veg

ஆனால், அவர் உயிரிழந்தார். உணவு அல்லது திரவம் நுரையீரலுக்குள் போனதாகவும் இதனால் ஏற்பட்ட 'ஆஸ்பிரேஷன் நிமோனியா' என்ற நுரையீரல் தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, ஜெயவீராவின் மகன் சூர்யா ஜெயவீரா,

கத்தர் ஏர்வேஸ் மீது கவனக்குறைவான சேவை மற்றும் மருத்துவ உதவி வழங்கத் தவறியதாகக் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், குறைந்தபட்ச இழப்பீட்டு தொகையாக $128,821 வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.