குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தா 12 மாதம் ஜெயில் - அரசு எச்சரிக்கை!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
அடிப்படைக் கல்வி
தென் ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து, குழந்தைகளின் கல்வி தேசத்தின் வெளிச்சம்.

அவர்களுக்கு கல்வி மறுப்பது குற்றம் என முழக்கமிட்டு வருகிறது. அதன்படி, தற்போது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் பெற்றோர்களுக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை கிடைக்கும் என உத்தரவிட்டுள்ளது.
அரசு எச்சரிக்கை
இந்த நடவடிக்கைக்கு அடிப்படைக் கல்வி சட்டத் திருத்தம் (BELA) என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் பெற்றோர்கள் மட்டுமின்றி பள்ளிகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கவோ அல்லது வேறு வகையான உடல் ரீதியான தண்டனையோ வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.