விராட் கோலியின் கேப்டன் பதவியை பறித்த கங்குலி? அவரே அளித்த பதில்
விராட் கோலியின் கேப்டன் பதவி குறித்து கங்குலி பேசியுள்ளார்.
சவுரவ் கங்குலி
கடந்த மாதம் நடைபெற்ற 2024 T20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி இது குறித்து பேசியுள்ளார். இதில், "2024 T20 உலகக்கோப்பை வென்றதும் கேப்டன் ரோகித் சர்மாவை பாராட்டும் எல்லோரும், அவரை இந்திய அணயின் கேப்டனாக நியமித்தபோது தன்னை பலரும் விமர்சித்ததாக கூறியுள்ளார். .
விராட் கோலி
மேலும், ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்ததே நான் தான் என்பதை பலரும் இப்போது மறந்துவிட்டனர். நான் பிசிசிஐ தலைவராக இருந்தபோது, ரோகித் சர்மாவிடம் இருக்கும் தலைமைப்பண்பு திறமையை பார்த்தாகவும், அதனால் தான் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பை வழங்கியதாகவும் கங்குலி கூறியுள்ளார்.
மேலும் நான் தான் விராட் கோலியின் கேப்டன் பதவியை பறித்ததாக பலரும் விமர்சித்தனர் ஆனால் அவராகவே தான் T20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
இந்திய அணிக்கு இரு கேப்டன்கள் இருக்க முடியாது ஒருவர் தான் இருக்க முடியும். அதனை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என விராட் கோலியிடம் தெரிவித்த போது, அவரே ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதன் பின்னரே ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
