விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது நடவடிக்கை - என்ன காரணம் தெரியுமா?

Virat Kohli Bengaluru
By Karthikraja Jul 09, 2024 07:30 AM GMT
Report

பெங்களூருவில் உள்ள விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி

பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலி கிரிக்கெட் தாண்டி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், எம்.ஜி ரோடு பகுதியில் விராட் கோலிக்கு சொந்தமான ஒன் 8 கம்யுன் (One8 Commune) பார் செயல்பட்டு வருகிறது. 

virat kohli

இந்த பார் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் இயங்கியதாக பெங்களூரு காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது போன்ற அதிக நேரம் இயங்கிய வேறு சில பார்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு

பெங்களூருவில் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி உண்டு. ஆனால் இந்த பார்கள் அதற்கு மேலும் இயங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிப்பதால், தொந்தரவாக இருப்பதாக பலரும் புகார் அளித்தனர். 

one8 commune

அந்த புகாரின் அடிப்படையிலே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். விராட் கோலியின் ஒன்8 கம்யூன் டெல்லி, மும்பை, புனே மற்றும் கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் இயங்கி வருகிறது