கார் விபத்தில் சிக்கிய மகள்.. நொறுங்கிப்போன கங்குலி - சாலையில் நடந்த பயங்கரம்!
கார் விபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் மகள் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு டோனா என்ற மனைவியும், சனா என்ற ஒரே மகளும் உள்ளார்.23 வயதாகும் சனா கொல்கத்தாவில் பள்ளிப் படிப்பை முடித்து, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் (யுசிஎல்) பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
மேலும் Deloitteஇல் நிறுவனத்தில் சனா பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை கொல்கத்தா டயமண்ட் ஹார்பர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக பேருந்து ஒன்று மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.
21 வயதில் லட்சங்களில் சம்பளம்.. சத்தமே இல்லாமல் வேலை செய்யும் இந்திய கிரிக்கெட் வீரரின் மகள் - யார் தெரியுமா?
இதில் நல்வாய்ப்பாக கங்குலியின் மகள் சனாவுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. அப்போது விபத்து ஏற்பட்டுத்திய பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். அவரை கார் ஓட்டுனர் விரட்டிச் சென்று பிடித்து காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
விபத்து
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.முன்னதாக 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி அறிமுகமானார்.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்களுடன் 7,000க்கும் மேற்பட்ட ரன்களும், 50 ஓவர் போட்டிகளில் 22 சதங்களுடன் 11,300 ரன்களும் கங்குலி எடுத்துள்ளார். மேலும் 2008 இல் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.