ஜெய்ஸ்வாலை கோபத்தில் திட்டிய ரோஹித் சர்மா.. அந்த வார்த்தையை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

Rohit Sharma Cricket Viral Video Sports
By Vidhya Senthil Dec 27, 2024 05:17 AM GMT
Report

  மைதானத்தில் ஜெய்ஸ்வாலை ரோஹித் சர்மா கோபத்தில் திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோஹித் சர்மா 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டிராபி போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று4வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.முதலில் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக இளம் ஓபனர் சாம் கோன்ஸ்டாஸ் களமிறங்கினார்.

ரோஹித் சர்மா

பும்ரா பந்தில் சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆட்டத்தின் நடுவே கோலியும் கோன்ஸ்டாஸும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனடியாக உஸ்மான் கவாஜா மற்றும் கள நடுவர் ஆகியோர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர்.

MCG டெஸ்ட் போட்டி.. அதிக ரன்களை அடித்த டாப் 5 இந்திய வீரர்கள் - லிஸ்ட் இதோ!

MCG டெஸ்ட் போட்டி.. அதிக ரன்களை அடித்த டாப் 5 இந்திய வீரர்கள் - லிஸ்ட் இதோ!

ஹேய் ஜெய்ஸி

இதனையடுத்து பரபரப்பான ஆட்டத்தில் இளம் சக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ரோஹித் சர்மா கடுமையாகக் கடிந்தார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. அதில், ரவீந்திர ஜடேஜா பவுலிங் செய்யும் ஸ்டீவன் ஸ்மித் அதனை ஸ்டோக் செய்தார்.

பந்து வேறு திசையில் போதும் போது சம்பந்தமில்லாமல் ஜெய்ஸ்வால் எகிறி குதிப்பார்.இதைப் பார்த்த ரோஹித் சர்மா ''ஹேய் ஜெய்ஸி.. நீ என்ன கில்லி கிரிக்கெட் விளையாடுறீயா'' என்ன கோபமாகக் கேட்கிறார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.