நூலிழையில் உயிர் தப்பிய கங்குலி; கார் மீது மோதிய லாரி - நடந்தது என்ன?
கங்குலியின் கார் வேகமாக வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் மேற்கு வங்கம், பர்த்வானில் உள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்று கொண்டிருந்தார்.
துர்காபூர் விரைவு சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது அங்கு வேகமாக வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார். ஆனால் கங்குலி காரின் பின்னால் வந்த இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன.
கார் விபத்து
இதனால், சிறிது நேரம் தாமதமாக நிகழ்ச்சிக்கு சென்ற கங்குலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதில் பேசிய கங்குலி, "நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பர்த்வானில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீங்கள் என்னை அழைத்ததில் நான் இன்னும் மகிழ்ச்சியடைகிறேன். பி.டி.எஸ் (பர்த்வான் விளையாட்டு சங்கம்) நீண்ட காலமாக என்னை வரச் சொன்னது. இன்று இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஏபி பர்த்வான் விளையாட்டு அமைப்புடன் 50 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. மாவட்டத்தில் இருந்து பல வீரர்கள் உருவாகியுள்ளனர்.
எதிர்காலத்திலும் இதே வழியில் மாவட்டத்திலிருந்து வீரர்களை நாங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.