தனித்தீவில் அவருடன் இருக்கனும்னு ஆசை - பகீர் கிளப்பிய ரஜினியின் மகள்!
ரஜினிகாந்தின் மகள் அளித்த பேட்டியில் பிரபலம் ஒருவர் குறித்து பேசியுள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் டாப் நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரது அப்பாவின் அடையாளத்தை வைத்து சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. இதையடுத்து இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி இருந்தார். இதில் பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
பேட்டியளித்த பிரபலம்
இந்நிலையில், இவர் விஜய் டிவியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியில் பிரபலம் குறித்து பேசியுள்ளார். அதில் சௌந்தர்யாவிடம் தனித்தீவில் யாருடன் இருக்க ஆசைப்படுவீர்கள் என்று தொகுப்பாளர் கேட்டுள்ளார்.
அப்பொழுது இதற்கு பதில் அளித்த அவர், "ஷங்கர் மற்றும் ராஜமௌலி உடன் இருக்க ஆசைப்படுவேன். அவர்களுடன் பேச நிறைய விஷயம் இருக்கிறது" என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.