அப்போவே நம்பிக்கை போச்சு; இனி மகள் பேச்சை கேட்கமாட்டேன் - ரஜினிகாந்த் பளீச்!
நடிகர் ரஜினி மேடையில் பகிர்ந்த தகவல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகர் ரஜினி
ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதில், மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ரஜினி, எந்திரன் படத்தை அடுத்து எனக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தேன்.
கோச்சடையான்
நீண்ட இடைவெளிக்குப் பின் படங்களில் நடிக்க ஆசை வந்தது. என் மகள் அதிபுத்திசாலி, அவர் என்னிடம் அனிமேஷன் படத்தில் நடிக்கலாம் என்று ஆலோசனை கொடுத்தார். எனக்கு கோச்சடையான் படம் மீது நம்பிக்கை இல்லை.

அதனால் எடுத்த வரை போதும் அப்படியே ரிலீஸ் பண்ணுங்க என்று சொல்லிவிட்டேன்.
நான் நினைத்த படி படம் சரியாக போகவில்லை. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. எப்போதும் அதிபுத்திசாலி பேச்சை கேட்கக் கூடாது எனப் பேசியுள்ளார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil