சூரியின் உணவகம் செய்த அவலம்..அரசு மருத்துவமனையில் உணவு வழங்க தடை- பரபரப்பு புகார்!
சூரியின் உணவகம் அரசு மருத்துவமனையில் உணவு வழங்க தடை வித்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு மருத்துவமனை
மதுரையில் நட்சத்திர நண்பர்கள் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகின்றனர். அங்கு இயங்கி வரும் ராஜாஜி மருத்துவமனையில் தினமும் மதுரை மட்டுமின்றி பல மாவட்டங்களுக்கும் சேர்ந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நட்சத்திர நண்பர்கள் அமைப்பினர் இதுவரை 200 நாட்களுக்கு மதிய உணவு தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தின் எதிரொலியாக அரசு மருத்துவமனையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், 2 தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் உட்பட்ட அதிகாரிகள் எல்லாம் மருத்துவமனையில் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளை விதித்திருந்தார்கள். எனினும் வழக்கம்போல் நட்சத்திர நன்பர்கள் அமைப்பினர் அங்குள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்க வந்துள்ளனர்.
அப்போது பாதுகாவலர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனால் மருத்துவமனையில் உணவை எதிர்பார்த்து காத்திருந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். அதோடு மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரியின் அம்மன் உணவகமும் இருக்கிறது.
நடிகர் சூரி
தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படுவதாக சொல்லி அவர்களை வெளியே அனுப்பி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய பொதுமக்கள், நடிகர் சூரியின் அம்மன் உணவகம் பாதிக்கப்படும் என்பதால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காமல் விரட்டுகிறார்கள்.
வறுமையின் பிடியில் உள்ள குடும்பத்தினர்கள் சிகிச்சை பெற அரசு மருத்துவமனையை நம்பி தான் வருகிறோம். ஆனால், இங்கு விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது. உணவுப் சமூக அமைப்புகள்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மருத்துவமனைக்கு வந்து கொடுக்கும் உணவுகளை நம்பி தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இதுபோன்ற அமைப்புகள் மூலம் கிடைக்கும் உணவுகளை நோயால் பாதிக்கப்பட்டவர்களும்,
அவைகளை சார்ந்த குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். செய்ய இந்த சம்பவம் தான் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.